R.Maheshwary / 2022 மார்ச் 29 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை- பசறை வீதியின் 5ஆம் கட்டைப் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்ட பெண்ணொருவர், கடும் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) காலை 6.45 மணியளவில் பாடசாலைக்குச் செல்லும் தனது மகளை பஸ்ஸில் ஏற்றுவதற்காக, வீதியை கடந்த போது, மொனராகலையிலிருந்து பதுளைக்கு நோயாளி ஒருவருடன் பயணித்த அம்பியூலன்ஸ் வண்டியில் குறித்த பெண் மோதியுள்ளார்.
இதன் போது பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் படுகாயமடைந்துள்ளதுடன், அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026