2026 ஜனவரி 21, புதன்கிழமை

வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Kogilavani   / 2021 மே 10 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று(10) காலை கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணம் அறவிடப்படாமை, கைக்காசு வேலை செய்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படாமை, மேலதிகக் கொழுந்து பறித்தலுக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படாமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது போராட்டம் தொடர்பாக, தாம் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் தோட்ட நிர்வாகம் கலந்து ஆலோசிப்பதாக தோட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X