Editorial / 2024 நவம்பர் 07 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிமடை- நுவரெலிய வீதியில் வெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஓட்டோவும், லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி வியாழக்கிழமை (07) காலை விபத்துக்குள்ளானதில் ஓட்டோ சாரதியான சீன பிரஜை( வயது 36) காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து பயணித்த ஓட்டோ, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெலிமடை பக்கம் இருந்து நுவரெலியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த லொரியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
4 hours ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago
9 hours ago