எம். செல்வராஜா / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் திறந்த, தொலைதூரக் கல்வி மய்யம் நடத்தும் வியாபார முகாமைத்துவ இளமானி (BBM) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
இந்த வெளிவாரிப் பட்டப்படிப்பு, மூன்று வருடங்களில் நிறைவு செய்யப்படவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். ரூபவதனன் தெரிவித்தார்.
விண்ணப்பங்களை, டிசெம்பர் 20 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள், டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம், மேற்படி பட்டப்படிப்புக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல், கணிதம், வணிகம், கலை, தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளின் மூன்று பாடங்களில் சாதாரண சித்திபெற்றவர்களும் மேற்படிக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை www.uwu.ac.lk/academic/centers/codl என்ற இணையத்தள முகவரியினூடாகவும் அல்லது பதுளை- பசறை வீதியில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தின் தொலைதூர கல்வி நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறி தொடர்பிலான மேலதிகத் தகவல்களை, 055- 2226276 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது www.uwu.ac.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago