2026 ஜனவரி 21, புதன்கிழமை

வெள்ளைச் சந்தனம் மீட்பு

Editorial   / 2021 மே 07 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பிரதேசத்தில் சுமார் 153 கிலோகிராம் வெள்ளைச் சந்தனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.எம். ஆர்.கே.பி. பாலசூரியவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பலாங்கொடை விக்கிலிய போவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றை சோதனை செய்த போது இவை மீட்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை பிரதேசத்தில், அதிகளவு வெள்ளை சந்தனம் மீட்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் எனப் பொலிசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வௌ்ளை சந்தனத்துடன் 40 வயதானவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி வெள்ளை சந்தனம், பொதி செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை இப்பிரதேச அண்மித்த காடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில், வெட்டப்பட்டவை எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென தெரிவித்த பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X