எஸ்.சதிஸ் / 2018 மார்ச் 19 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்ட இ.தொ.கா உறுப்பினரும், பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினருமான மலர்வாசகம், இ.தொ.கா ஆதரவாளர் சந்திரபோஸ் ஆகிய இருவரையும், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார் .
சந்தேகநபர்கள் இருவரையும், ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.
கடந்த வெள்ளிகிழமை இரவு, கொட்டகலையில் இருந்து திம்புள்ள பகுதியை நோக்கி பயணித்த வான் ஒன்றில் மோதுண்ட ஒருவருக்கு, கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரால், முறையாகச் சிகிச்சை வழங்கபடவில்லையெனத் தெரிவித்து, இ.தொ.கா ஆதரவாளர்கள் சிலர், வைத்தியசாலையை முற்றுகையிட்டு, வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தினர் எனக் கூறி, திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யபட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு கோரி, வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும், கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள், பெரும் அவதியுற்றமையும் குறிப்பிடத்தக்கது.
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago