2026 மே 14, வியாழக்கிழமை

dd

’வைத்தியர்களும் தாதிமார்களும் இல்லை’

எஸ்.சதிஸ்   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு,  வைத்தியர்களையும் தாதிமார்களையும் அதிகரித்துத் தருமாறு கோரி, இன்று (19), மஸ்கெலியா பிரதேச சபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த வைத்தியசாலை, நீண்ட நாள்களாக, ஒரேயொரு வைத்தியரைக் கொண்டு இயங்குவதாகவும் தாதிமார்கள் இன்மை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம், குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கென வந்த இரண்டு நோயாளர்கள் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது என்றும் வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்கள் வெகுநேரமாக காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

எனவே, குறித்த வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் தேவைக்கேற்ப வைத்தியர்களையும் தாதிமார்களையும் நியமிக்க, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .