Sudharshini / 2016 மார்ச் 16 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ், கே.புஸ்பராஜ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்திலுள்ள வீடொன்றின் மீது, லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தினால், குறித்த வீடு சேதமாகியுள்ள போதிலும், வீட்டில் இருந்தவர்கள் பாதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
லோகி தோட்டத் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலான ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியோன்றே, இவ்வாறு வீட்டின் மீது விழுந்துள்ளது.
குறித்த வீதியின் ஓரத்தில் லொறியை நிறுத்தியுள்ள சாரதி, அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது லொறியின்; நடத்துனர், குறித்த லொறியை செலுத்த முற்பட்ட போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதென தெரிவித்த லிந்துலை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago