2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வீதியில் விழுந்துக் கிடந்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த மாணவர்கள்

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாணர்கள் இருவர், வீதியில் விழுந்துக் கிடந்த பணப்பையை கண்டெடுத்து, அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்தச் சம்பவமொன்று, கண்டி, அலவத்துகொடை நகரில், சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அலவத்துகெடை தேசியப் பாடசாலையில் தரம் 8,9 ஆகிய வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களான கே.நிரஞ்சன், கே.எஸ்.செல்வரத்னம் சிலக்ஷன் ஆகிய மாணவர்களே, இந்நற்காரியத்தை செய்துள்ளனர்.

இப் பணப் பையில், 3,430 ரூபாய் பணமும் அடையாள உள்ளிட்ட ஆவணங்களும் இருந்ததாக, அலவத்துகொடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ. ஜீ.சத்துரங்க சந்தருவர் ஜயசிங்க என்ற 20 வயது இளைஞரது, பணப்பையே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது.

பணப்பையை பெற்றுக்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞனை வரவழைத்து அதனை அவ்விளைஞனிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேற்படி மாணவர்களின் நற்செயலையும் பாராட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .