Gavitha / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்திலுள்ள விநாயகர் ஆலயத்திலுள்ள விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (09) காலை, ஆலயக்கதவு திறந்து கிடப்பதை கண்ட தோட்ட மக்கள், ஆலயத்துக்குள் சென்று பார்த்த போது, சிலை காணாமல் போயுள்ளதை கண்டுள்ளனர்.
அதன்பின்னர், ஆலய பரிபாலன சபையினரால் நோட்டன் பொலிஸாருக்கு முறைபாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .