Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
மாகாண மட்டத்தில் தேசிய வினைத்திறன்மிகு செயற்பாடுகளை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் மாகாணமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரஞ்ஜித் மந்தும பண்டார தெரிவித்தார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் தேசிய வினைத்திறன்மிகு செயற்பாடுகளை வலுப்படுத்தும் முதலாவது நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாட்டின் சகல மாகாணங்களிலும் தேசிய வினைத்திறன் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதன் முதலாவது நிகழ்வை சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பித்துள்ளோம்.
சப்ரகமுவ மாகாணம் கல்வி மற்றும் வினைத்திறன்மிகு செயற்பாடுகள் உட்பட ஏனையத்துறைகளில் பல பரிசில்களை பெற்று முன்னிலையில் காணப்படுவதை நாம் வரவேற்கின்றோம். சப்ரகமுவ மாகாணத்தில் சேவையாற்றக்கூடிய சிறந்த முதலமைச்சர் ஒருவர் இருப்பதன் காரணத்திணாலேயே இம்மாகாணம் அபிவிருத்தி பாதையில் சிறந்து காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
நாட்டை வினைத்திறனுடன் முன்நோக்கி கொண்டு செல்ல முடியும். சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகள் வினைத்திறன் மூலம்தான் முன்நோக்கி காணப்படுகின்றது. எமது நாட்டின் கீழ் மட்டத்தில் இருந்த வெளிநாடுகள் இன்று விணைத்திறன் மூலம்தான் முந்நோக்கி காணப்படுகின்றது.
எனவே, எமது நாட்டில் தேசிய வினைத்திறன்மிகு செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரச சேவையாளர்கள் பங்கு அவசிமாகும்” என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரஞ்ஜித் மந்தும பண்டார மேலும் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால கருத்து தெரிவிக்கையில்,
“சப்ரகமுவ மாகாண சபை 2005ஆம் ஆண்டு முதல் வினைத்திறன்மிகு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் வினைத்திறன் போட்டியில் சப்ரகமுவ மாகாண சபை பலதடவைகள் முதலாம் இடங்களை பெற்றுள்ளது.
சப்ரகமுவ மாகாணம 2005ஆம் ஆண்டு கல்வி பொதுதர சாதாரணதரம், உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் ஆகிய பரீட்சை பெறுபேறுகளில் நாட்டின் நான்காவது இடத்தில் காணப்பட்டது.
தற்போது புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளில் பெறுபேறுகளின்; அடிப்படையில் நாட்டின் முதலாம் இடத்தையும், க.பொ.த.சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளில் நாட்டின் மூன்றாவது இடத்தையும் பெற்று கொள்வதற்கு சப்ரகமுவ மாகாணத்திற்கு வாய்ப்பு கிடைத்தது.
சப்ரகமுவ மாகாணத்தில் 52 பாடசாலைகள் வினைத்திறன்மிகு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளது. மேற்படி வெற்றி பெற்ற 52 பாடசாலைகனின் ஆசிரியர்களை இந்தியாவின் லக்னவ் நகரில் அமைந்துள்ள பட்டதாரி பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு விசேட பயிற்சியும் பெற்று கொடுக்கப்பட்டது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மூலம் மாகாணமட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வினைத்திறன்மிகு செயற்பாடுகளை சப்ரகமுவ மாகாணத்தின் முன்னெடுத்துச் செல்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்” என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலும் தெரிவித்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026