Niroshini / 2016 ஜூன் 02 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமர்ஷல் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்ற நபர் படுங்காயமடைந்துள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகிய நபர் பாடசாலை மாணவர் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago