Sudharshini / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களது தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்கான விசேட செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார்.
தேசிய உணவு உற்பத்தியை விரிவுப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக மாத்தளை பிரதேச செயலகத்தில் திங்;கட்கிழமை (05) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தேசிய உணவு உற்பத்தியை இரு மடங்காக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை, செயல் முறைப்படுத்துவதற்கு கிராமிய மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
எமது நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய விவசாய பொருட்களை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகின்றன. அதனை நாம் எமது நாட்டில் உற்பத்தி செய்து கொண்டால் பெருமளவு பணத்தை மீதப்படுத்தலாம்' என தெரிவித்தார்.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago