R.Maheshwary / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது என தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், சமூக சேவையாளருமான சதாநந்தன் திருமுருகன், இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சிபெற்று வீறுநடை போடும் என்றார்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே திருமுருகன் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டுக்காக முன்கள போராளிகள் போல் பாடுபட்டுவரும் மலையக மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால், எமது பெருந்தோட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் என்பது இன்னும் மேம்படவில்லை. சிறார்கள் மத்தியில் போசாக்கின்மை பிரச்சினையும் நீடிக்கின்றது.
இனியும் இந்நிலைமை நீடிக்க இடமளிக்க முடியாது. எனவேதான் மாற்றமொன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக அரசியல் களத்தில் நான் புகுந்துள்ளேன்.
பல சமூகசேவைகளை செய்து, கல்வி புரட்சிமூலம் சமூகமாற்றத்தை ஏற்படுத்திவருகின்றேன். அதனை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டுசெல்லவே அரசியலுக்குள் வந்தேன். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் எமது பிரதிநிதிகள் நுவரெலியா மாவட்டத்தில் கை சின்னத்தில் களமிறங்குகின்றனர். மலையக மக்களுக்கு நிச்சயம் நாம் கை கொடுப்போம். எமது கட்சி சின்னம்கூட கைதான்.
எமது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த நல்லாட்சிகாலத்தில்தான் மலையகத்தில் தனிவீட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டது. சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்படி மக்கள் துயர் அறிந்த அவர் நிச்சயம் மலையக மக்களை கைவிடமாட்டார். நாமும் அவருடன் இணைந்து மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்.
9 minute ago
34 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
21 Mar 2026