Editorial / 2026 மார்ச் 31 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீதியால் பயணித்த பிரதேசவாசிகள் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். உயிரிழந்தவர் கண்டி - கொழும்பு தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராகப் பணியாற்றுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ஹட்டன், வெளிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகிறது. இவர் கடந்த 29-ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பாக அவரது குடும்பத்தினரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



15 minute ago
24 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
35 minute ago