2026 மே 07, வியாழக்கிழமை

ஹட்டனில் மேலும் 10பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காரணமாக, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் பகுதியில், நேற்று இரவு (31) மேலும் 10 பேர், சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர் காமதேவன் தெரிவித்தார்.

ஹட்டன் ஹிஜ்ராபுர பகுதியைச் சேர்ந்த  வர்த்தர் ஒருவர் உட்பட அவரது குடும்பத்தின் ஐந்து பேரும் ஹட்டன் காமினிபுர பிரதேசத்தைச் சேரந்த அவரது சாரதியின் குடும்பத்தில் 04 பேருமாக மொத்தம் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி குடும்பத்தினர், கொரானா அவதானம் நிலவும் பகுதியான நீர்கொழும்பு பகுதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காகச் சென்று வந்துள்ளதாக, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் 14 நாள்களுக்கு வெளியில் செல்லக்கூடாது என இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்ளுக்குத் தேவையான அத்தியவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள சுகாதாரப் பிரினரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .