R.Maheshwary / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் கல்வி வலயத்தின் கீழுள்ள 200 மாணவர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் தொகையைக் கொண்ட 74 பாடசாலைகளை, நாளைமறுதினம் (21) ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதற்கமைய, 53 தமிழ் பாடசாலைகளையும் 21 சிங்கள பாடசாலைகளையும் இவ்வாறு திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அன்றைய தினம் கடமைகளுக்கு சமூகம் அளிப்பர் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஒன்றரை வருடத்துக்கு அதிக காலம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த நிலையில், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள்ளை வெற்றிகரமாக முன்னெடுக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஆசிரியர் மற்றும் அதிபர்களிடம் தான் கோரி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .