Janu / 2026 ஜனவரி 27 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பதுளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பகஸ்தோவ பொலிஸாரால் திங்கட்கிழமை (26) அன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யும் வேளையில் சந்தேகநபரிடமிருந்து 4.2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த போதைப்பொருள் விநியோகிக்கும் நோக்கத்திற்காக வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் கான்ஸ்டபிளுடன் பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் ஹெரோயின் கடத்தல் மற்றும் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago