2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஹொலிரோசரி த.ம.வி, வரலாற்றுச் சாதனை: இரு மாணவிகள் 3A சித்தி

Editorial   / 2026 ஏப்ரல் 03 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

  நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, பொகவந்தலாவை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்  சாதனை படைத்துள்ளனர்.
 
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் இருவர் 3A பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதுபாடசாலை வரலாற்றில் முதன்முறையாகும்
 
3A சித்தி பெற்ற மாணவிகள்
 
1. ஆனந்தன் யுகாசினி
2. சகாதேவன் பவித்ரா
சிறப்பான தேர்ச்சி விகிதம்
 
இம்முறை இப்பாடசாலையிலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 24 மாணவர்களில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 87.5% சதவீத தேர்ச்சியாகும்
 
பாடசாலை அதிபர் பரசுராமன் சங்கரின் வழிகாட்டலில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனும் மாணவர்களின் கடின உழைப்பினாலும் இந்த வரலாற்றுச் சாதனை எட்டப்பட்டுள்ளதாக பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. மலையகப் பகுதியிலுள்ள ஒரு பாடசாலை இத்தகைய உயரிய பெறுபேற்றைப் பெற்றுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .