2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

பாலித ஆரியவன்ச   / 2017 ஜூலை 23 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் வைத்திருந்தக் குற்றச்சாட்டின் பேரில், பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் வைத்து, 26 மற்றும் 29 வயதுடைய இருவரை, நேற்றுக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து, 8 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளனர்.

பதுளை, கெப்படிபொல வீதி மற்றும் தல்தென ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்துக்கு இடமாகிய நடமாடிய இருவரை விசாரணைக்கு உட்படுத்திய போதே, குறித்த இருவரும் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X