2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹோட்டல் ஊழியருக்கு தொற்று

Kogilavani   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

ஹப்புத்தளை நகரிலுள்ள ஹோட்டலொன்றின் ஊழியருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், இன்று (28) வெளியானபோதே,  ஒருவருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார். 

ஹல்துமுல்லயைச் சேர்ந்த இளைஞருக்கே (வயது 25) தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, பண்டாரவளை ஹீல்ஓயா பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்  அவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X