Kogilavani / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஆசிரியர் உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறுக் கோரி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கனபதி கனகராஜ் மற்றும் பழனி சக்திவேல் ஆகியோர், சபையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் முன்வைக்கவுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,
'பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தற்போது 6000ஆம் ரூபாய் கொடுப்பணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், திட்டமிடப்பட்டு வழங்கத் தீர்மானித்த நியமனங்களில் இன்னும் 800 பேருக்கான நியமனங்களை வழங்கப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தமக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பணவைக் கொண்டு தமது போக்குவரத்து செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால், இத்தொழிலை விட்டு வெளியேறுகின்றவர்;களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என கூறப்பட்டுள்ளது.
'இவ்விடயங்களை கருதிற்கொண்டு, ஆசிரியர் உதவியாளர்;களை இலங்கை ஆசிரியர் சேவை 3.11இற்கு உள்வாங்கி அவர்களுக்கான கொடுப்பனவையும் இலங்கை ஆசிரியர் சேவை 3.11 இற்கானதாக பிரகடணப்படுத்த வேண்டும்' என அப்பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
19 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
43 minute ago