2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

15 இலட்சம் ரூபாய் செலவில் வீதிகள் திறப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் சிறுவர் பராமரிப்பு கிராமிய அபிவிருத்தி சமூக சேவைகள் மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஜித் பண்டாரவின் பன்முகப்படுத்தப்பட்ட மாகாண சபை நிதியின்மூலம் குருவிட்ட நடுகாரதெனிய பிரதேசத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூன்று வீதிகளின் திறப்பு விழாவும் அப்பிரதேசத்தில் கண் பார்வையற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகவும் நேற்று(11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் பிரதி அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபையின் சிறுவர் பராமரிப்பு கிராமிய அபிவிருத்தி சமூக சேவைகள் மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஹேஷான் பண்டார உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .