2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

210 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் மூவர் கைது

Kogilavani   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, கலஹா, பல்லேகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசாப்பு மடுவமொன்றிலிருந்து 210 கிலோகிராம் நிறையுடைய  மாட்டிறைச்சியை கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட செயலணியின் கம்பளை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் திங்கட்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சுகாதாரப் பரிசோதகரின் போலி முத்திரை, இறைச்சி வெட்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மடுவமானது, சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக இயங்கி வந்துள்ளதுடன் விதிமுறைகளுக்கு அமைய இறைச்சிகளும் வெட்டப்படவில்லை என மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கலஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .