2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'சமத்துவத்தை பெற மக்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்'

Sudharshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

'அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் நிலையானது மாற வேண்டும். பெண்களும் ஆண்களுக்கு சரிநிகர் சமமானவர்கள்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.

மகளிர் தினத்தையொட்டி ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'பெண்களின் அரசியல் பிரவேசம் மிக  அவசியமானது என்பதை வலியுறுத்தி இம்முறை தொழிலாளர் தேசிய சங்கம், மகளிர் தினத்தை கொண்டாட உள்ளது' என்றார். பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துள்ளன. வேலைத் தளங்களில் பெண்கள் பல  இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஓர் ஆரோக்கியமான நிலை அல்ல. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். சமய நிறுவனங்களில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் அவர்கள் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வர்.

'பெருந்தோட்டப் பெண்கள் இன்றும் அடிமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது காலத்தின்; தேவை. மலையகப் பெண்களை அரசியலுக்குள் உள்வாங்கி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமன் என்ற நிலை உருவாக்க வேண்டும். அந்நிலையை உருவாக்க பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியம். எதிர்வரும் தேர்தலில் பெண்களுக்கு 25சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்திருப்பது சிறந்த முன்னேற்றமாகும். இந்த சந்தர்ப்பத்தை பெண்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'; என குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .