Sudharshini / 2016 ஜூன் 02 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'நாட்டில் சிகரெட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொள்வதைப் போல, மதுபாவனையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
'சிகரெட்டுக்கான வரியை 90 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கின்றது' என இ.தொ.கா.வின் உப-தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'சிகரெட் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகள் மக்கள் சார்ந்தவையாக உள்ளன. சிகரெட் பெட்டிகளில் 80 சதவீதமான எச்சரிக்கை விளம்பரங்களை கட்டாயப்படுத்திய ஜனாதிபதி, தற்போது அதற்கான வரியை 90சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்' என்றார்.
'சமூக சீரழிவை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொளளும் அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும்.
ஜனாதிபதி சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க தீர்மானித்ததைப் போன்று, சட்டவிரோத மது உற்பத்தியை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago