2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

'பித்தலாட்டக்காரனாக இருக்க விரும்பவில்லை'

Kogilavani   / 2016 ஜூலை 31 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'உடுவரைத் தேயிலைத் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட அவலம், வேறு எந்தவொரு தொழிற்சாலைக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. மறுபிறவியில் இந்து மதம் விசுவாசமுள்ளது. அதனடிப்படையில், உடுவரைத் தேயிலைத் தொழிற்சாலையும் மறுபிறவி எடுத்துள்ளது' என பதுளை மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

'நிதி ஒதுக்கப்படாமல், எந்தவொரு வேலைத்திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுவதை நான் விரும்பவில்லை. பொய்க்காரன், பித்தலாட்டக்காரன், ஏமாற்றுப்பேர்வழி என்ற நாமங்கள் எனக்கு சூட்டப்படுவதையும் நான் விரும்பவில்லை' எனவும் அவர் கூறினார்.

ஹாலிஎல ரொசட் தோட்ட  பாதை, ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் உடுவரை தோட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் நிகழ்வு என்பன சனிக்கிழமை(30) நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர்,   'பதுளை மாவட்டத்திலிருந்து உச்ச இடமான நாடாளுமன்றத்துக்;கு என்னை ஆகக்கூடிய 54 ஆயிரம் விருப்பு வாக்குகளை வழங்கி, அனுப்பிய எமது மக்களின் அபிமானத்துக்குரியவனாகவே, தொடர்ந்தும் செயற்படுவேன். எமது மக்களின் நம்பிக்கைக்கு என்றும் பாத்திரமாக இருப்பேன். நான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைவிட மக்களின் தேவைகளை அறிந்து கடமைப்புரிவேன்' என்றும் அவர் கூறினார்.

'உடுவரை தேயிலைத் தொழிற்சாலைக்கு சீல் வைக்கபட்டதற்கான காரணத்தை இதுவரை ஊகிக்க முடியாதுள்ளது.  இது, அத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடும் முயற்சியா? அல்லது திட்டமிட்ட சதியா  என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் துரித முயற்சியின் பயனாக, கடந்த மாதம் 7ஆம் திகதி மூடப்பட்ட இத் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுகின்றது' என்றார்.

இத்தொழிற்சாலைக்கு 'சீல்' வைக்கப்படும்போது, நானும் வடிவேல் சுரேஸ் எம்.பி.யும் சீனாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில், அரசின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தோம். நாம் இருவரும் நாடு திரும்பியதும், இத்தொழிற்சாலையை மீண்டும் திறக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம். எம் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .