Gavitha / 2016 ஜூலை 23 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை கோரி நாளை ஞாயிற்றுக்கிழமை (24) மாத்தளை நகரில் பெருந்தோட்ட தொழிலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி நிகழ்வை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதுடன் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், மலையக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பலவும் இணைந்து கொள்ளவுள்ளதாக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயலாளர் மார்க்ஸ் சொபாகர் தெரிவித்தார்.
மேற்படி இக்கவனயீர்ப்பு போராட்டம் மாத்தளை நகரின் மணிகூட்டு சந்தியில் 24ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு விரும்பும் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள முடியும் என்றும் கோரப்பட்டுள்ளது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago