Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ், ஆ. ரமேஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
'தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள போதும், ஐக்கிய தேசியக் கட்சியிடமே அதிகப்படியான ஆசனங்கள் உள்ளன. ஆகையால், 2020ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தை அசைக்க முடியாது. அசைக்கவும் விடமாட்டோம்' என பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில் வியாழக்கிழமை(10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பெருந்தோட்ட தொழிலாளர்களின் தேவையை உணர்ந்து சேவை செய்ய நான் தயாராக உள்ளேன்.
இம்முறை நடைப்பெற்ற தேர்தலில் நுவரெலியா, மஸ்கெலியா மற்றும் கொத்மலை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள், எனக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்துள்ளனர்.
அம்மக்களின் தேவைகளை நான் கட்டாயமாக நிறைவேற்றுவேன். தலவாக்கலை பிரதேசத்தை சகல வசதிகளுடன் கூடிய பிரதேசமாக மாற்றுவதற்காக, மாதாந்தம் செயற் குழுகளை நியமித்து அவற்றின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்' என்றார்.

4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago