Sudharshini / 2016 மார்ச் 09 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா, பாலித்த ஆரியவன்ச
விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை 'பசளைத்' திருடர்கள் என ஏளனப்படுத்திய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளினின் கருத்துக்கு, அவர் சார்பில் தான் மன்னிப்புக் கோருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளை மாவட்ட விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு, உற்பத்தித்துறை சங்கத்தினர் இன்று (9), மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
'ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின், விவசாயிகளை அவமதித்தமை பாரதூரமான குற்றமாகும். ஆனால், விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வது வழமை. எனவே, இதுதொடர்பில் விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் விவசாய அமைச்சரிடமும் தெளிவுப்படுத்துவேன். மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்காக, நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்' என்றார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச்சென்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago