2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாத்தளை பகுதியில் நாளை 14 மணிநேர நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சராபாத் அமீர்)

மாத்தளை நீர்வழங்கல் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 14 மணிநேர  நீர்வெட்டு மாத்தளைப் பகுதியில் இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாத்தளை நகரம், பலாபத்வலை, அளுவிகாரை, தென்ன, இபுல்தண்ட கிரிகல்பொத்த மாத்தளை வத்த, துங்கொலவத்த, உடுபிஹில்ல, தாரலந்த, ரத்தொட வீதி மற்றும் இஹலஹரஸ்கம ஆகிய பகுதிகளிலேயே நாளை இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாகவும்   நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நீரை முன்கூட்டி சேமித்து வைக்குமாறும் பொதுமக்களிடம் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .