2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிகரட் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட 14000 வில்லைகள் பறிமுதல்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பாடசாலை மாணவரகள் மத்தியில் புகைத்தலை ஊக்குவிக்கும் விதமாக சிகரட் வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த 14000 வில்லைகளையும்   அலவத்துகொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக்குறணை நகரில் வியாபார ஸ்தலம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த இத்தயாரிப்பு ஒன்றுக்குள் 25 வில்லைகள் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு அருகே விற்பனை செய்யப்படும் சிகரட் வடிவிலான  வில்லைகள் இனிப்பு மற்றும் புளிப்பு ரஸங்களை கொண்டதாகும்.

சிகரட் வடிவில் தயாரிக்கப்பட்டிருந்த  அவ்வில்லைகளை பாடசாலை மாணவர்கள் பாவிப்பதன் மூலம் மாணவர்கள் சிகரட் பாவனைக்கு பழக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட வில்லைகளில் ஏதேனும் போதைப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .