2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வயோதிப பெண் கொலை தொடர்பில் 4 பேர் கைது

Menaka Mookandi   / 2013 ஜனவரி 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் ஒருவரின் கொலை சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸார் நேற்று மாலை நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இம்மாதம் முதலாம் திகதியன்று கெங்கல்ல, தம்பகொட்டுவ எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது. டி.ஜி.உக்குமெனிக்கே என்ற 72 வயதான வயோதிப பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவந்த மெனிக்கின்ன பொலிஸார் நான்கு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.சந்தேகநபர்கள் மெனிக்கின்ன, தம்புளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், வயோதிப பெண்ணிடமிருந்த பணம் மற்றும் தங்காபரணங்களை கொள்ளையிடும் நோக்கிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை மெனிக்கின்ன பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X