2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

1,000க்கான போராட்டம் இன்றும் நடந்தது

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாயை வழங்கவேண்டும் என்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என்று கோரியும், கொஸ்லந்தை நகரில், இன்ற (28) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தங்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறக்கூட, சுதந்திரமற்ற மக்களாக, தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதாகக் கூறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர், மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொது மக்கள் ஆகியோர் பல வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி, தமத எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் ஏனைய மக்களை போல, சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகள், இதன்போது முன்வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .