Kogilavani / 2021 மே 06 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன்
கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பனன்கம்மன கிராம அலுவலகர் (473) காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதிகள், இன்று (6) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
மேற்படிப் பகுதியில் 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி கிராமம் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்தப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதுவரை இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago