R.Maheshwary / 2023 ஜனவரி 04 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 18ஆம் திகதி வரை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர இன்று உத்தரவிட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனராத்ன மற்றும் அவரது மகனை தாக்கி, அவர்களது வீட்டை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த 13 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
26 minute ago
51 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
51 minute ago
21 Mar 2026