2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொழும்பில் பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்து கண்டியில் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேராதனை பல்கலைகழக மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

கண்டி - கொழும்பு வீதியில் கலஹா சந்தியிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

கொழும்பில் நடந்த பல்கலைகழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, தமது சக மாணவர்கள் கைது செய்யப்பட்டதையும் தாக்கப்பட்டதையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர்.

பேராதெனியா - கலஹா வீதியை இடைமறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சில மணிநேரம் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

500இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட இவ்வார்ப்பாட்டத்தை கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .