Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு கூட்டமொன்று நாளை வெள்ளிக்கிழமை கண்டி, டி.எஸ்.சேனாநாயக்கா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ புஸ்பதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பில் ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவின் பாரியாருமான அனோமா பொன்சேகா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கிரியெல்ல எம்.பி கூறினார்.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் விடுதலையினை வலியுறுத்தி நாளை மாலை 5 மணியளவில் கண்டி நாக தேவாலயத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
2 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago