2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கடை உடைக்கப்பட்டு கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சுவர்ணஸ்ரீ


நாவலப்பிட்டி நகரின் சொய்சாகலை வீதியிலுள்ள கடையொன்றிலிருந்து 2,500 ரூபா பணம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சொய்சாகலை வீதியில் அடுத்தடுத்துள்ள 2 கடைகளினதும்  பேக்கரியொன்றினதும்; பூட்டுக்கள் உடைக்கப்பட்டே கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.   இருப்பினும் பொருட்களைக் கொள்ளையடிக்காத இக்கொள்ளையர்கள் கடையொன்றிலிருந்த 2,500 ரூபா பணத்தை மாத்திரமே கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக இக்கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

இக்கடைகளில் மின்துண்டிப்பை மேற்கொண்ட பின்னரே கொள்ளையர்கள்; வர்த்தக நிலையங்களின் பூட்டுக்களை உடைத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கடை உரிமையாளர்கள் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X