2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாடசாலை புத்தகங்களை விற்பனை செய்தவர் சந்தேகத்தில் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கமலி,எம்.எம்.எம்.ரம்ஸீன்

கம்பளை நகரில் இலவச பாடசாலை புத்தகங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை ஊழியர் ஒருவரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 1,050 இலவசப் பாடசாலை புத்தகங்களையும் கைப்பற்றியதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு பழைய புத்தகங்களை வழங்கிவிட்டு புதிய புத்தகங்களை புத்தகக் கடை ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்.

இக்கடைக்கு இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் பாடசாலை தொடர்பில் விசாரணை செய்துவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X