2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முதலமைச்சர்கள் மாநாடு ஒத்திவைப்பு

Super User   / 2013 ஜனவரி 08 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எப்.எம். தாஹிர்

முதலமைச்சர்கள் மாநாடு காலவரைறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என  ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பசறை யூரி முகாமைத்துவ பயிற்சி நிலைய கேட்போர்கூடத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமை முதலமைச்சர்கள் மாநாடு இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில் ஊவா மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர்கள் மாநாடு கடந்த 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறவிருந்தது. எனினும் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றமையினால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 12ஆம் திகதி பதுளையில் நடைபெறவிருந்த நிலையிலேயே  பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X