2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற இளம் தாய் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற இளம் தாயொருவரை கம்பளை பொலிஸார்  இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இப்பெண் குழந்தையுடன் தற்கொலைக்கு முயல்வதை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கம்பளை, அட்டபாகை பகுதியை சேர்ந்த இப்பெண் இன்று அதிகாலை தனது இரு குழந்தைகளை கூலித்தொழிலாளியான கணவனிடம்
விட்டுவிட்டு தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கம்பளை நகருக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X