2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தலவாக்கலையில் தீவிபத்து: 4 கடைகள் எரிந்து நாசம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஞ்சன், க.கிருஷாந்தன்


தலவாக்கலை நகரப்பகுதியில் கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்துக் காரணமாக நான்கு கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதணிகள் விற்பனை கடை, மறக்கரி கடை, நகைக்கடை, புத்தக கடை ஆகிய நான்கு கடைகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.

ஹட்டன், தலவாக்கலை-லிந்துலை நகரசபை, நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், தலவாக்கலை, லிந்துலை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ஒழுக்கின் காரணாமக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .