2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை தாக்கி அவரது மோட்டார் வாகனத்திற்கும் சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சேவை புரிந்துள்ள இப்பொலிஸ் அதிகாரி இப் பெண்ணுடன் நட்பு வைத்திருந்ததாகவும் பண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியை தேடி குறித்த பெண் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திற்கு வந்துள்ளார். அதன் போதே பொலிஸ் பரிசோதகர் இப் பெண்ணை தாக்கியதுடன் அவரது மோட்டார் வாகனத்தை சேதப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பில் அந்த பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே அந்த பொலிஸ் அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .