2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாகாண அமைச்சர் ராம் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


மத்திய மாகாண சபையின் விவசாய அமைச்சர் எம்.ராம் இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

கண்டி கெட்டமைப்பையிலுள்ள அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போதே கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் மத்திய மாகான ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய மாகாண விவசாய, நீர்பாசன, கால்நடை உற்பத்தி, சுகாதாரம், கமநல அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றாடல் துறை, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக எம்.ராம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .