2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொதுமக்கள், பொலிஸாரால் பாலம் புனரமைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.கிஷாந்தன்


கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது பாதிப்படைந்த கினிகத்தேனை, வேவெல்தலாவ  கிராமத்திற்கு செல்லும் கம்பி பாலம் பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் முயற்சியால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளம் அனர்த்தத்தின்போது இப்பாலம் சேதமடைந்தததால், இப்பாலத்தை பயன்படுத்தி வந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்தார்கள்.

பிறகு புதிய பாலம் ஒன்றை நிர்மாணித்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததன்காரணமாக கினிகத்தேன பொலிஸ் உத்தியோகத்தர் எச்.ஏ.பிரமேலால் தலைமையில் தனியார் மின்சார உற்பத்தி நிலையத்தின் அனுசரணையுடன் பொதுமக்களும் சேர்ந்து ஒரு புதிய உறுதியான கம்பி பாலத்தை கட்டி முடித்தார்கள்.

அப்பாலத்தை ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர் சமண் ரத்நாயக்க நேற்று திறந்துவைத்தார்.

இந்த திறப்பு விழாவில் சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .