2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் நடைபாதையோரக் கடைகள் அகற்றல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


ஹட்டன் பஸ் தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் நடைபாதையோரத்திலுள்ள சிறிய கடைகளை இன்று புதன்கிழமை ஹட்டன் நகரசபை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையாலேயே இக்கடைகளை ஹட்டன் நகரசபை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

இதற்கிடையில்,  கடைகளை அகற்றுவதாக  எந்தவித முன் அறிவித்தல்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லையென கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததன்; காரணமாகவுமே இக்கடைகளை அகற்றியுள்ளதாக ஹட்டன் நகரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .