2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அறம்பேபொல வீட்டில் கொள்ளை; சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


அலவத்துகொடை, அறம்பேபொல பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து சுமார் 650,000 ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி, தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல குற்றங்களின் சந்தேக நபரான இச்சந்தேக நபர் கடந்த 10ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பொலிஸில் கைச்சாத்திட்டு திரும்பும் போது இக்கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுள் 1000 அவுஸ்திரேலியா டொலர்கள். 150 ஓமான் ரியால்கள், 50 அமைரிக்க டொலர்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்னும் பல குற்றங்களுடன் சம்பந்தபட்டவர் என்றும் அவ்வாறு ஒரு குற்றத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் கைச்சாத்திட்டு செல்லும் போது இக்கொள்ளையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கொள்ளையடித்த கையடக்க தொலைபேசி ஒன்றை வைத்திருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .