2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சார்ள்ஸ் நுவரெலியாவுக்கு நாளை விஜயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 15 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.தியாகு

 பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி நாளை சனிக்கிழமை நுவரெலியாவுக்கு வருகைதரவுள்ளார்.

தனது விஜயத்தின் போது சார்ள்ஸ் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையை பார்வையிடவுள்ளதுடன்  அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

சார்ள்ஸின் வருகையை முன்னிட்டு அகலவத்த பெருந்தோட்ட கம்பனிக்கு லபுக்கலை தோட்டத்தில் பாரிய அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இளவரசர் சார்ள்ஸின் வருகையை முன்னிட்டு உலங்கு வானூர்த்தி தரையிறங்குவதற்கான விசேட மேடை ஒன்றும் லபுக்கலை தோட்டம் இலக்கம் ஏழு பாடசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுவருகின்றது.

கடந்த சில நாட்களாக விசேட உலங்கு வானூர்தி பரீட்சார்த்தகரமாக தரையிறக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இத் தோட்டத்தில் அமைந்தள்ள பல குடியிருப்புகளின் கூரைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு தோட்டத்தில் சூழுவுள்ள பல இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுமயப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலை ஒன்றிற்கும் விஜயம் செய்து அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்யவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை லபுக்கலை தோட்டத்தில் விக்டோரியா ராணியினால் நாட்டப்பட்டதாக கருதப்படும் பாரிய மரம் ஒன்றும் உள்ளது.இதனை விக்டோரியா மகாராணி இலங்கைக்கு விஜயம் செய்தபோது நாட்டியதாக தோட்ட தொழிலாளர்கள் சிலர் கூறுகின்றனர்.இளவரசரின் இந்த பயணத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .