2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யுவதி துஷ்பிரயோகம்: தோட்ட உதவி அதிகாரி தப்பியோட்டம்

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான தோட்ட உதவி அதிகாரி நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி, நாகசேனை தோட்டத்தைச்சேர்ந்த உதவி தோட்ட அதிகாரியான சஞ்ஜீவ அபேசேகர என்பவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். அவரை தேடி நாவலப்பிட்டி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

தனது சட்டத்தரணியின் மூலமாக நீதிமன்றத்தில் சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராகியுள்ளார். அவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே அவர் தப்பியோடியுள்ளார்.

இதேவேளை, அவர் தப்பிச்சென்றதாக கூறப்படும் வாகனத்தின் சாரதியை அன்றையதினமே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக அவருக்கு நீதிமன்றம்  பிணை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு 21 வயது யுவதியை பயமுறுத்தியே தோட்ட பங்களாவில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்திலிருந்து அவர் தப்பியோடிபோது பொலிஸார், நீதிமன்றத்தின் பிரதான வாயிலை மூடுவதற்கு முயற்சித்த போதும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. காரில் தப்பியோடிய அவர் இடைநடுவில் இறங்கி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .